கொல்லிகள் முற்காப்பு
  
Translated

கொல்லிகள் முற்காப்பு — நுண்ணுயிர்களிலிருந்து ஒரு நோய்/பிணி வருமுன் முற்காப்பாக வரும் சிக்கல்களைத் தவிர்க்க கொல்லிகளைப் பயன்படுத்துதல்.

 

"பொதுவாக, முதன்மை அறுவை சிகிச்சை அல்லது பல் சிகிச்சை செயல்முறை செய்வதற்கு முன்பு கொல்லிகள் முற்காப்பாகப் பயன்படுத்தப்படுகிறது.  குறிப்பாக, திறந்த காயங்களின் வழியாக நுண்ணுயிர்கள் உடலில் நுழையும் ஆபத்தைத் தடுப்பதற்கு.”

Learning point

ஒரு நாள் கொல்லிகள் முற்காப்பு மனிதனுக்குப் போதுமானது

 

நீண்ட காலமாக மனிதர்களிடமும் விலங்குகளிடமும் பிணிகள் வராமல் தடுக்க கொல்லிகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. 1928இல் பெனிசில்லின் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு கொல்லிகளை அறுவை சிகிச்சைக்கு முன்பு வழங்குவதனால் காயம், நோய் சதவீதத்தைக் குறைக்கும் என்பது தெளிவாகத் தெரிந்தது.[1] ஆரம்பத்தில் கொல்லிகள் அமைப்பு இல்லாத வகையில் பரிந்துரைக்கப்பட்டன.

 

கொல்லிகள் பயன்பாடு அதிகரித்ததால், நுண்ணுயிர் ஏதிர்ப்பும் மருத்துவமனையில் தொற்றிய மருந்தைகளை எதிர்க்கும் பிணிகளும் பெருகிப் பிரச்சினையாக மாறியது. விவசாயிகள், கால்நடைகள் இழப்பைத் தடுக்க கொல்லிகளைப் பயன்படுத்துகின்றனர். சில நாடுகளில், ஆரோக்கியமான கால்நடைகள் வளர்ச்சியை ஊக்குவிக்க கொல்லிகளைப் பயன்படுத்துகின்றனர்.

 

பத்து ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததை விட தற்போது முற்காப்பாக கொல்லிகள் குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது. இதற்கான காரணங்கள் கொல்லிகளின் எதிர்ப்பாற்றல் அதிகரிப்பு, நோய்களை உண்டாக்கும் நுண்ணுயிரிகளில் ஏற்படும் மாற்றங்கள், நுண்ணுயிரிகளைக் கண்டறியக்கூடிய தொழில்நுட்பத்தின் முன்னேற்றங்கள் ஆகும்.

 

நுண்ணுயிரிகளைக் கண்டறியக்கூடிய தொழில்நுட்பத்தின் முன்னேற்றத்தின் காரணமாக முதன்மை அறுவை சிகிச்சைக்கு முன்னர் அதிக ஆபத்து தரக்கூடிய நுண்ணுயிரிகளுக்கு எதிராக கொல்லிகளைப் பயன்படுத்த பரிந்துரைக்கப்படுகின்றது. அறுவைசிகிச்சைக்கு முன்னர் கொல்லிகளை மட்டுமே பயன்படுத்துமாறு உலக சுகாதார அமைப்பு வலியுறுத்துகிறது.[2] உலக சுகாதார அமைப்பு அறுவை சிகிச்சைக்குப் பிறகு கொல்லிகளை நீண்ட நாட்கள் உபயோகிப்பதைக் கண்டனம் செய்கிறது. பெரும்பாலும், செயற்கை இருதய இதழ்கள் உள்ளவர்களுக்கு மூட்டுக் காய்ச்சல் உள்ள நோயாளிகளுக்கு மட்டுமே பல் சிகிச்சை செயல்முறைகளுக்கு முன் முற்காப்பு கொல்லிகளை உபயோகிக்கவும் மற்றவர்களுக்கு வேண்டாம் என்று சிபாரிசு செய்கிறது.

 

2017ஆம் ஆண்டில், உலக சுகாதார அமைப்பு மருத்துவத்திற்கு அனைத்து வகை கொல்லிகள் பயன்பாட்டையும் ஒட்டுமொத்தமாகக் குறைக்க வேண்டுமென்று பரிந்துரைத்துள்ளது. மேலும், முன்கூட்டிய நோயறிதல் இல்லாமலும் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும் பின்னால் வரும் நோயைத் தவிர்ப்பதற்கும் உணவு உற்பத்தி செய்வதற்கும் கால்நடைகளுக்கும் கொல்லிகளைப் பயன்படுத்த்துவதை முழுமையான கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வர வேண்டும் என்று பரிந்துரைக்கிறது.[3] இருப்பினும், கால்நடைப் பண்ணைகளில் நோய்வாய்ப்பட்ட விலங்குகளைக் கண்டறிந்திருந்தால் மட்டுமே ஆரோக்கியமான மிருகங்களுக்கு நோய் வராமல் தவிர்க்க கொல்லிகளைப் பயன் படுத்தலாம் என்று பரிந்துரைக்கிறது.

 

வளர்ச்சியை ஊக்குவிக்க கொல்லிகளைப் பயன்படுத்துவதை நிறுத்த பிரச்சாரம் செய்யும் நாடுகளில் விவசாயிகள் முற்காப்பாக கொல்லிகள் உபயோகிப்பதை அதிகரித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், கால்நடை வளர்ப்பில் பயன்படுத்தப்படும் மொத்த அளவு கொல்லிகள் குன்றாமல் மென்மேலும் அதிகரித்து உள்ளது.[4] ஆகையால், நோயறிதல் இல்லாமல் முற்காப்புக் கொல்லிகள் பயன்பாட்டைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகளைப் பின்பற்றுவது மிக முக்கியம் என்கிறது உலக சுகாதார அமைப்பு.

 

கொல்லிகளைப் பயன்படுத்துவதற்குப் பதிலாகக் கால்நடைகளுக்கு நோய் வராமல் தவிர்க்க நலவியலை மேம்படுத்துதல், தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்துதல், வளர்ப்பு பராமரிப்பு முறைகளில் மாற்றங்களைக் கொண்டு வருதல் ஆகியவை சிறப்பானதாகக் கருதப்படுகின்றன.

 

ஆதார நூற்பட்டியல்

[1]     வெஸ்டர்மான், ஈ. எல். (1984). அறுவை சிகிச்சையில் கொல்லிகள் முற்காப்பு: வரலாற்று பின்னணி, அடிப்படை காரணங்கள் மற்றும் வருங்கால கட்டணத்திற்கான தொடர்பு. அமெரிக்கன் ஜர்னல் ஆஃப் இன்ஃபெக்ஷன் கன்ட்ரோல், 12 (6), 339-343.

Westerman, E. L. (1984). Antibiotic prophylaxis in surgery: Historical background, rationale, and relationship to prospective payment. American Journal of Infection Control,12(6), 339-343. doi:10.1016/0196-6553(84)90007-5

[2]     உலக சுகாதார அமைப்பு. (2018). அறுவை சிகிச்சை நுண்கிருமிப்பிணிகளைத் தடுப்பதற்கான உலகளாவிய வழிகாட்டுதல்கள், இரண்டாவது பதிப்பு. ஜெனீவா, சுவிட்சர்லாந்து: உலக சுகாதார அமைப்பு.

World Health Organization. (2018). Global guidelines for the prevention of surgical site infection, second edition. Geneva, Switzerland: World Health Organization. ISBN 978 92 4 155047 5

[3]     உலக சுகாதார அமைப்பு. (2017, நவம்பர் 7). ஆரோக்கியமான விலங்குகளுக்குக் கொல்லிகளைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். வலைத்தளத்திலுருந்து மீட்டெடுக்கப்பட்டது.

World Health Organization (2017, November 7). Stop using antibiotics in healthy animals to preserve their effectiveness. Retrieved from

https://www.who.int/news-room/detail/07-11-2017-stop-using-antibiotics-in-healthy-animals-to-prevent-the-spread-ofantibiotic-resistance

[4]     மெவியஸ், டி., & ஹீடெரிக், டி. (2014). விலங்குகளில் கொல்லிகள் பயன்பாட்டைக் குறைத்தல் “சேர்ந்து செல்லலாம்”.

Mevius, D., & Heederik, D. (2014). Reduction of antibiotic use in animals “let’s go Dutch”. Journal Für Verbraucherschutz Und Lebensmittelsicherheit,9(2), 177-181. doi:10.1007/s00003-014-0874-z

Related words.
Word of the month
New word